Santhosh Nambirajan  movie

சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் 'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் தமிழ்நாட்டில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். முதல் பாதியில் காமெடி, காதல் என்று பரபரப்புடன் சென்றது. இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் கனமான காட்சிப்படுத்துதலில் சென்ற கதை கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்துடன் நிறைவடைந்தது.

படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். அதில் உச்சபட்சமாக ஒரு வெளிநாட்டு தொழிலாளர், நடிகரும் இணை தயாரிப்பாளருமான 'சிங்கப்பூர்' துரைராஜ் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு "எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது, எங்களுடைய கஷ்டம் எங்களுடைய இருக்கட்டும் எதற்கு குடும்பத்திற்கு என்று சொல்ல மாட்டோம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை மிக அழகாக காட்சி ஆக்கி அதனை கமர்சியல் உடன் சிரிக்க வைத்து எங்களையும் சிந்திக்க வைத்தது 'உழைப்பாளர் தினம்' படம் என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டியுள்ளார் .

மற்றொரு வெளிநாட்டு தொழிலாளர் "என்றாவது ஒருநாள் எனது சொந்த ஊரில் வெற்றிகரமாக சென்று நிரந்தரமாக வாழ்வேன் அதற்கு 'உழைப்பாளர் தினம்' படம் தான் எனக்கு உத்வேகம்" என்றார். படம் திரைக்கு வரும் போதும் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் துபாயில் சிறப்பு காட்சி திரையிட படக் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.

Advertisment

நடிகர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் சென்ற வருடம் வெளியான 'வட்டார வழக்கு' படத்தில் ஆக்ஷனில் மிரட்டி இருந்தார். 'உழைப்பாளர் தினம்' படத்தை நடித்து இயக்கி நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. "வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களும் இந்த உழைப்பாளர் தினம் படத்தைக் கொண்டாடுவார்கள்" என்கிறார்.