Skip to main content

தீபாவளிக்கு திரைக்கு வரும் சந்தானம் - 240 நாட்களுக்கு பிறகு புதுப்படம் ரிலீஸ் 

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

biskoth

 

இயக்குனர் ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியாற்றுபவன், எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான், என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் 'சௌகார்' ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தானத்தின் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். இவர், ஏற்கனவே சந்தானத்துடன் 'ஏ1' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா பாதிப்பால், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடியிருந்ததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று முதல் திரையரங்குகளை திறக்க, தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. ஆனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையேயான வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட மோதலால் புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

          
இந்நிலையில், இந்தப் பிரச்சனைக்கு சமரசம் காணும் வகையில், 'க்யூப்' மற்றும் 'யு.எஃப்.ஓ' போன்ற நிறுவனங்கள், இந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் புதுப்படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் வசூலிக்காது என்று அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம், வி.பி.எஃப் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், தீபவாளிக்கு புதுப்படங்கள் வருவதில் இருந்த சிக்கல்கள் தீர்ந்தன. இதனைத் தொடர்ந்து, சந்தானத்தின் 'பிஸ்கோத்' படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.