biskoth

இயக்குனர் ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியாற்றுபவன், எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான், என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் 'சௌகார்' ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தானத்தின் ஜோடியாகதாரா அலிஷாபெர்ரிநடிக்கிறார். இவர், ஏற்கனவே சந்தானத்துடன் 'ஏ1' படத்தில்நடித்தவர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

கரோனாபாதிப்பால், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடியிருந்ததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று முதல் திரையரங்குகளை திறக்க, தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. ஆனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரையரங்குஉரிமையாளர்களுக்கும் இடையேயான வி.பி.எஃப் கட்டணம்தொடர்பாக ஏற்பட்டமோதலால்புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப் பிரச்சனைக்கு சமரசம் காணும் வகையில், 'க்யூப்' மற்றும் 'யு.எஃப்.ஓ' போன்ற நிறுவனங்கள், இந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் புதுப்படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் வசூலிக்காது என்று அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம், வி.பி.எஃப் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், தீபவாளிக்கு புதுப்படங்கள் வருவதில்இருந்தசிக்கல்கள் தீர்ந்தன.இதனைத் தொடர்ந்து, சந்தானத்தின் 'பிஸ்கோத்' படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

.