Skip to main content

நாளை ஒ.டி.டியில் வெளியாகும் சந்தானம் படம்!

 

biskoth

 

நடிகர் சந்தானம் நடிப்பில், தீபாவளிக்கு வெளியான படம் 'பிஸ்கோத்'. இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். படத்தில் 'சௌகார்' ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக முக்கியக் கதாபாத்திரத்திலும், சந்தானத்தின் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரியும்  நடித்திருந்தனர். 

 

'பிஸ்கோத்' படம், தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகி, ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் நாளை ஒ.டி.டியில் வெளியாகவுள்ளது.

 

ஜீ பிளக்ஸ் ஒ.டி.டி தளத்தில், நாளை முதல்  'பிஸ்கோத்' படத்தை பே பெர் வியூ (pay per view) முறையில் ரசிகர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தை ஒரு முறை காண, 99 ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கனவே, ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' படம், இதே ஒ.டி.டி தளத்தில், இதேபோல் 'பே பெர் வியூ' முறையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.