/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/avs_0.jpg)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார், இவர்இனிமே இப்படிதான், தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'டிக்கிலோனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடிகர் சந்தானம் இயக்குநர் சீனிவாச ராவ் இயக்கத்தில் 'சபாபதி' படத்தில் நடித்துள்ளார். ‘கூக் வித் கோமாளி’ புகழ், எம்.எஸ். பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனையடுத்து வரும் நவம்பர் 19 ஆம் தேதி சபாபதி படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சபாபதி படத்திற்கு போட்டியாக அதே நாளில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. குற்றம் 23 படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் மீண்டும் இயக்குநர்அறிவழகனுடன் இணைத்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
சந்தானம் நடிப்பில்உருவாகியுள்ள 'சபாபதி' படத்தின் டிரைலர்நாளை வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)