samyuktha shan talk about vijay and varisu movie

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் நடித்த சம்யுக்தா வாரிசு படம் பற்றியும் விஜய்யுடன் நடித்ததுகுறித்தும்தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். காஃபி வித் காதல் பட விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்தா, “வாரிசு படம் பயங்கரமா வந்திருக்கு.எனக்கு அவர்கூடடயலாக் எதுவும் இல்லை, ஆனால் குடும்பப்படம் என்பதால் அவர் வரும் சில காட்சியில் எல்லோரும்இருப்போம். அவரது நடிப்பு திறமை, மத்தவங்க கிட்ட பழகும் விதம் எல்லாம் வேற லெவல். முதல் முறையாக இதைநேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு ஆசீர்வாதமாக நினைத்து கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்திலஎல்லார்கிட்டயும் நல்லா பழகுவார். ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ளாமல் எளிமையான ஒருத்தராக நடந்துகொள்வார். சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது குடையை விஜய் சாரே பிடித்து கொள்வார். அந்தளவுக்கு மிகவும் எளிமையான மனிதர்” என தெரிவித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment