/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/naga_1.jpg)
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் 'மெர்சல்', 'கத்தி', 'தெறி', 'இரும்புத்திரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா,சமீபத்தில் அவரைவிவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு தெரியும், நான் இனிமேல் தான் என் வாழ்க்கையை வாழப்போகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது என்னுடைய மனவலிமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். எங்கள் பிரிவுக்கு பிறகு நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன்என நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைத்துக் கூடபார்க்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)