Skip to main content

“இதுவும் கடந்து போகும்” - சமந்தா உருக்கம்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

samantha release the press note she was affected by Myositis disease

 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் 'யசோதா' படத்தில் நடிக்கிறார். இதில் யசோதா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வருகிற நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

ad

 

இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் "யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள் எடுத்துக் கொண்டது. 

 

நாம் எப்பொழுதும் வலுவான நிலையில் முன்னிற்க அவசியம் இல்லை என்பதை நான் பொறுமையாக உணர்கிறேன். இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. என்னுடைய கணிப்பின் படி இன்னும் ஒரு நாளில் குணமடைவதை நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்கள் இந்த நோயிலிருந்து பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் - அனுபவம் பகிர்ந்த சமந்தா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Samantha fainted on the movie shooting set

சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இத்தொடர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த மாதம் முதல் அதை தொடங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் சமந்தாவும் அவரது நண்பர் ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் கல்லீரல் குறித்து பேசியிருந்தார். அப்போது, “டேண்டலியன் என்கிற ஒருவகை மூலிகைத் தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என சமந்தா தெரிவித்ததையடுத்து அவர் பேசியது தவறான கருத்து என ஒரு மருத்துவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில், படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார். “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் சீரிஸில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலே மயங்கி விழுந்துவிட்டேன். அந்த சமயத்தில் அல்கேஷ் பெருமளவு உதவினார்” என்றார்.

Next Story

சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nayanthara wished samantha

சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.  இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். பின்பு சமீபத்தில் இத்தொடரை பார்த்ததாகவும் தங்களுக்கு பிடித்ததாகவும் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிட்டுவதாக தெரிவித்த அவர் அண்மையில் அதனை வெளியிட்டுருந்தார்.

இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் ‘யே மாயா சேசவே’ என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகி 14 ஆண்டுகளை கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சமந்தா புகைப்படத்தை பகிர்ந்து நீங்கள் அதிக ஆற்றல் பெற வேண்டும் என்கிற தொனியில் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். இருவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.