/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/347_12.jpg)
காலா, விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சாக்ஷி அகர்வால். இவர் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல் முறையாக திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இங்கு கிடைக்கிற அன்பு, பாசம் எல்லாமே ரொம்ப அழகானது. இன்றைக்கு நான் நடித்துள்ள படத்தின் போஸ்டர் வெளியாகிறது. விஜய் சேதுபதி அதை ரிலீஸ் செய்கிறார். அந்த படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கிறேன். மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். அந்தப் படங்களும் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. கன்னடத்திலும் ஒரு படம் நடித்து வருகிறேன். இந்த வருஷம் நல்ல விஷயங்கள் நடக்கும் என நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “அடுத்தடுத்து ரிலீஸாகும் அனைத்து படங்களையுமே பார்க்க விரும்புகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் ரஞ்சித்தின் தங்கலான் படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் அவருடன் நான் பணியாற்றிருக்கிறேன். லாரன்ஸ் மற்றும் பாலா தொடர்ந்து உதவி செய்து வருவதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். நம்மலால் முடிந்ததை சமூகத்திற்கு கொடுக்க வேண்டும். விஜய் போன்று இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன். ஆனாலும் அவர் இனிமேல் நடிக்கப்போவதில்லை என்பதை நினைத்து ஒரு நடிகையாக வருந்துகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)