Skip to main content

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“அவர் கடலில் குதி என்றாலும் குதித்து விடுவேன்” - ஃபேன் பாயாக மாறிய செல்வராகவன்

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
selvaraghavan speech in dhanush 50 raayan audio launch

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 26ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. கடந்த 7ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது செல்வராகவன் பேசுகையில், “ரஹ்மான் சார் இருக்கும் நிகழ்ச்சியில் நான் வந்திருக்கிறேன் என்பதில் தனியாக ஒரு சந்தோஷம். எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை அவருக்கு என்னைவிட வெறித்தனமான ரசிகர் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரின் மிகப்பெரிய  ரசிகன் நான். அவர் கடலில் குதி என்றாலும் குதித்து விடுவேன்

என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கே கடவுள் கொடுத்த பரிசாக நான் அவரைப் பார்க்கிறேன். ஆல்பத்திற்கு ஆல்பம் அவர் தன்னை புதிதாக மேம்படுத்திக்கொண்டே இசையமைத்து  வருவதை பார்த்து வருகிறேன். அந்த ஆச்சர்யத்தில்தான் வாழ்க்கை போகிறது. வாழ்க்கை முழுவதும் அவரிடம் இருந்து நிறைய  பாடல்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார். 

Next Story

“நாட்டு நாட்டு பாடல்  என்னுடைய சிறந்த படைப்பு இல்லை” - எம்.எம்.கீரவாணி 

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
MM Keeravani spoke about oscar winning song

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களில் வரும் இசையை ஒப்பிடும் போது, ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு கிடையாது. தாமதமாகவோ, முன்னதாகவோ ஒரு பாடலுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், இது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஆனால், அங்கீகாரம் வரவேண்டும் என்றபோது, ​​அது ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தாவது வரும்” என்று கூறினார்.

முன்னதாக ஆஸ்கர் விருது வென்ற போது எம்.எம்.கீரவாணி கூறியதாவது, “நான் தச்சர்களின் சத்தத்தை கேட்டு வளர்ந்தேன். இப்போது நான் ஆஸ்கார் விருதுகளுடன் இருக்கிறேன். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றி பெற வேண்டும், ஒவ்வொரு இந்தியனின் பெருமையும், என்னை உலகின் உச்சியில் வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.