/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/168_0.jpg)
தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு, இப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
‘ஜகமே தந்திரம்’ பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் தனுஷிற்கு பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சூப்பர்டா தம்பி. தனுஷுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. ‘ஜகமே தந்திரம்’ பட வெளியீட்டிற்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ சகோதர்கள், தற்போது ‘தி க்ரே மேன்’ படத்தை இயக்கிவருகின்றனர். இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)