Skip to main content

'ஆர்.ஆர்.ஆர்' கொண்டாட்டத்திற்கு கம்பி வேலி போட்ட திரையரங்கம்!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

 rrr movie release theatre puts up barbed wires, fences front screen

 

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்  வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் ஸ்ரீகாகுளத்தில்  உள்ள திரையரங்கில் ஒன்றில் திரைக்கு முன் உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் இருக்க கம்பி வேலியை  திரையரங்கு நிர்வாகம் அமைத்துள்ளது. பொதுவாக ரசிகர்கள் தங்களது விருப்ப நாயகனை திரையில் பார்த்த உற்சாகத்தில் பேப்பரை கிழித்து தூவுவது, திரைக்கு முன் எழுந்து ஆடுவது என பல செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இன்னும் சில ரசிகர்கள் இதற்கு மேலே சென்று திரையரங்கு திரையையே கிழிப்பது போன்ற செயல்களிலும்  ஈடுபடுவது உண்டு. இந்த மாதிரியான சவங்களை தவிர்க்கவே  திரைக்கு முன் கம்பி வேலி அமைப்பது, ஆணி பதிப்பது உள்ளிட்டவைகளை செய்வதாக திரையரங்கு நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
show cancelled details on april 19

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

Next Story

சிம்பு போல் ராம் சரணுக்குக் கிடைத்த கௌரவம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ram charan get honorary doctorate same like simbu

தெலுங்கு திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து முனனணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ராம் சரணை கோலிவுட் ரசிகரகளிடம் பிரபலமாக்கியது.  

இதையடுத்து மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்தது. 

ராம் சரண் இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படமும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் சிம்புவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.