rosaiah passed away actor kamalhaasan mourning

Advertisment

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா (வயது 88) இன்று (04/12/2021) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஐதராபாத்தில் காலமானார்.

ரோசய்யா மறைவுக்குப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1e1141c7-3f73-4367-a1a3-016a3fdbb26c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_55.jpg" />

Advertisment

அந்த வகையில்ரோசய்யா மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.