rk suresh yuvan movie issue

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே. சுரேஷ் தற்போது காடுவெட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கத்தில் மஞ்சள் ஸ்கீரீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்த ஆர்.கே. சுரேஷ், நேற்று நடந்த காடுவெட்டி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

இப்படத்தை அடுத்து தென் மாவட்டம் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவரது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷே இப்படத்தை எழுதி இயக்குவதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தென் மாவட்டம் பட போஸ்டர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தென் மாவட்டம் படத்தில் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. யாரும் இதுதொடர்பாக பேசவும் இல்லை” எனக்குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்து பதிவிட்ட ஆர்.கே, “யுவன் சார் நீங்கள் எங்களுடன் ஒரு திரைப்படத்திற்கும் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment