rk suresh

எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஜோசப். இப்படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்க, படம் மாபெரும் வெற்றிபெற்றது. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஜோசப் திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமிழில் 'விசித்திரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் ரீமேக்கை இயக்குநர் பாலா தயாரிக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய உடல் எடையை 73 கிலோவில் இருந்து 95 கிலோவிற்கு அதிகரித்திருந்தார்.

Advertisment

இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்த போதிலும், கரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. தற்போது இயல்புநிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, படத்தின் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் மாதம் 'விசித்திரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.