Skip to main content

ஆர்.ஜே.பாலாஜியை இயக்கும் விஜய் சேதுபதி பட இயக்குநர்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

rj balaji next with vijay sethupathy movie director gokul

 

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து 'வீட்ல விசேஷம்' படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'சிங்கப்பூர் சலூன்' என்ற தலைப்பில் ஷிவானி ராஜசேகர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே இயக்குநர் கோகுல் சிம்புவை வைத்து 'கொரோனா குமார்' படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்