mk amman

Advertisment

எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆர். ஜே. பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகும் மற்றொரு படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். என்.ஜே. சரவணன் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்குகிறார் பாலாஜி.

இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் நயன்தாராவின் கதாபாத்திரம் பயணிப்பதுபோல இருப்பதாக முன்பே செய்திகள் வெளியாகின. மேலும், ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும்நடிக்கின்றனர். எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஐசரி கணேஷ்தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார்.

மே 1ஆம் தேதி படம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் படத்திலிருந்து ஒருசில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது சாமி காதாபத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் 48 நாட்களுக்கு விரதம் இருந்துநயன்தாரா நடித்தார் என்றும், படக்குழு மொத்தமும் இந்த பட ஷூட்டிங்கிற்காக சைவம் மட்டும் எடுத்துக்கொண்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கொடுக்கப்பட்ட பேட்டியில் ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், “கரோனா பிரச்சனை அனைத்தும் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு மக்கள் திரும்பிய பின்னரே மூக்குத்தி அம்மன் படம் வெளியிடப்படும். இதை நானும் எனது தயாரிப்பாளரும் இணைந்து முடிவு செய்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.