Skip to main content

'சூர்ப்பனகை'-யாக மாறிய நடிகை ரெஜினா கஸண்ட்ரா!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

gsgsgsh

 

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துவரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். 

 

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் அக்சரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜு பேசியபோது... "‘சூர்ப்பனகை’ படத்தின் முழு படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளைத் தீவிரமாக செய்துவருகிறோம். விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். ‘சூர்ப்பனகை’ படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம், நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விடாமுயற்சி’ - ஏ.கே. க்ளிக்ஸ்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023

 

 

 

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.

அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரவ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது உறுதியாகிவிட்டது. அஜித்துடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று யூகியுங்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவிற்கு கீழ் அனைவரும் அஜித் என கமெண்ட் செய்திருந்தனர். 

இந்த நிலையில் படக்குழுவை அஜித் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அர்ஜுன் நேற்று பகிர்ந்திருந்த புகைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனியின் புகைப்படம், ரெஜினா கெஸாண்ட்ராவின் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட் செய்யப்பட்டார். முதற்கட்ட படப்பிடிப்பும் அவர்தான் பணியாற்றினார். ஆனால் அண்மையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.   

Next Story

'20 வயதில்... '- கசப்பான அனுபவம் பகிர்ந்த ரெஜினா

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

regina cassandra about his bad experience

 

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெஜினா காஸண்ட்ரா. தொடர்ந்து மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்நிலையில் சினிமாவில் அவர் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சிலரை அணுகினேன். அப்போது ஒரு நபர் தன்னை அழைத்து, அட்ஜஸ்ட்மென்ட் செய்யத் தயாராக இருந்தால், உடனே படப்பிடிப்பைத் தொடங்கலாம் என சொன்னார். அப்போது எனக்கு 20வயது தான். அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. என் சம்பள தொடர்பான விஷயத்தை சொல்கிறார் என நினைத்தேன். பிறகு உண்மை என்ன என்று என் மேலாளர் மூலம் தான் தெரிய வந்தது. 

 

சில நடிகைகள் இந்த மாதிரி  நிகழ்வுகளை சந்திக்க நேரிடும். ஆனால், இன்னும் சில நடிகைகள் தங்களை பிரபலம் ஆக்கி கொள்வதற்காக இப்பிரச்சனையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்றார்.