‘ஃபேமிலி மேன்’ வெப் தொடரை இயக்கிய இயக்குநர்களான ராஜ் மற்றும் டீகே, அடுத்ததாக இந்தியில் ஒரு வெப் தொடரை இயக்கிவருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடரில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடருக்கான முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகிவருகிறது.
இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெசண்ட்ரா நடித்துவருவதாகதகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் சேதுபதியின் மனைவியாக அவர் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரெஜினா கெசண்ட்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
When work is fun, the joke is funnier…@ReginaCassandra#setdiaries#BehindTheScenespic.twitter.com/MWjvP7kqa7
— Raj & DK (@rajndk) September 23, 2021