Skip to main content

லெஸ்பியனாக நடிக்கும் ரெஜினா !

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
regina

 

 

'சிலுக்குவார் பட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து நடிகை ரெஜினா நடிப்பில் பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் பாலிவுட்டில் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’ படத்திலும் ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்தில் சோனம் கபூர் ஒரு லெஸ்பியன் என்பதால் அவருக்கு உடனடியாக திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலரில் சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ளது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சூர்ப்பனகை'-யாக மாறிய நடிகை ரெஜினா கஸண்ட்ரா!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

gsgsgsh

 

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துவரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். 

 

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் அக்சரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜு பேசியபோது... "‘சூர்ப்பனகை’ படத்தின் முழு படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளைத் தீவிரமாக செய்துவருகிறோம். விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். ‘சூர்ப்பனகை’ படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம், நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும்" என்றார்.

 

 

Next Story

ஐந்து கதாநாயகிகள் ஹீரோவாக நடிக்கும் படம்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

bgdhshs

 

'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனநர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்தப் படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். 

 

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.