சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது.
வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோரை சந்தித்து காசோலை மற்றும் விலையுயர்ந்த கார்களைப்பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், 100 ஆதரவற்ற குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடியும், ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ. 60 லட்சமும் வழங்கி உதவி செய்தது. மேலும் அதனைத்தொடர்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்தார்.