Published on 08/08/2022 | Edited on 08/08/2022
![Rangarattinam Video song out now](http://image.nakkheeran.in/cdn/farfuture/dinnLaxURLqTkSisT97nQYgDOfEPW9TI2jaHa8RHJG4/1659963629/sites/default/files/inline-images/1490_0.jpg)
பா.ரஞ்சித், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/5xNTjTacSdj_ELGUoRPI2KG2wIDMeYJnILzsYFSDEuY/1659963772/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_32.jpg)
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ரங்கராட்டினம் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அறிவு எழுத எம்.எஸ் கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா, கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அனைவரும் சமம் என்ற வகையில் வெளியாகியுள்ள இந்த பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.