/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/E5tdEdRVUAUAUk4_0.jpg)
தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தின் 'சம்மர் ஆஃப் 92' நகைச்சுவை படத்தில் நடித்த நடிகை ரம்யா நம்பீசன் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில்...
"எனது கதாபாத்திரத்தின் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)