Skip to main content

சர்வதேச அளவில் கவனம்பெற்ற ராம்சரண்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

Ramcharan received international attention

 

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம்சரண், 'ஆர்.ஆர்.ஆர்' படம் மூலம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளார். இப்படம் கோல்டன் குளோப் விருது நிகழ்வில் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக விருதைப் பெற்றது. மேலும், 95வது ஆஸ்கர் விருதுக்கு தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட நிலையில்,  'நாட்டு நாட்டு’  சிறந்த பாடல் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போது, விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும் நடிகைகளும் கலைஞர்களும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்துகொண்டனர்.

 

அதில், நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களைப் பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில்,  இப்பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம்சரண் இடம்பிடித்திருக்கிறார்.  முதல் பத்து இடங்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்சரண் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர். 

 

ராம்சரண், தான் அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கான தேர்வில் எப்போதும் முழுமையான கவனத்துடன் இருக்கிறார். நம்மூரில் கூறப்படும்  'ஆள் பாதி ஆடை பாதி' என்கிற சொல்லாடலை நிரூபிக்கும் வகையில், தான் அணியும் ஆடை எப்போதும் தனித்துவமாகவும் சிறப்பானதாகவும் பிரத்தியேகமானதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நவீன பணியிலான ஆடைகளை அணிந்து பேஷன் ஐகானாகவும் இருந்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹெய்மர்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
golden globe award 2024

சர்வதேச அளவில் புகழ்பெற்ற விருதும் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 81வது கோல்டன் குளோப் விருதும் நடந்து முடிந்துள்ளது. இதில் அதிக விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் - சிலியன் மர்ஃபி கூட்டணியில் வந்த ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வாங்கியுள்ளது. கோல்டன் குளோப் விருது வென்ற திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு:

சிறந்த திரைப்படம் (டிராமா) - ஓப்பன்ஹெய்மர்
சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்
சிறந்த திரைப்படம் (அனிமேஷன்) - ‘தி பாய் அண்ட் தி ஹெரோன்’
சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை - பார்பி
சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த நடிகர் (டிராமா) - சிலியன் மர்ஃபி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (டிராமா) - லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)
சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) - லுட்விக் யோரன்ஸோன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த பாடல் - ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி)

Next Story

"தெலுங்கு கொடி உயரப் பறக்கிறது" - ஆஸ்கர் குறித்து ஜெகன்மோகன் பெருமிதம்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

andhra cm jagan mohan praises rrr for grabing oscar

 

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.

 

இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தெலுங்கு கொடி உயரப் பறக்கிறது. நம்முடைய நாட்டுப்புற பாரம்பரியத்தை கொண்டாடும் இப்பாடலுக்கு சர்வதேச அளவில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். என்னையும், பல கோடி தெலுங்கு மக்களையும், அனைத்து இந்திய மக்களையும் பெருமைப்படச் செய்துள்ளீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகர் ராம்சரன், "ஆர்.ஆர்.ஆர் நம் வாழ்விலும் இந்திய சினிமா வரலாற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த படமாக எப்போதும் இருக்கும். ஆஸ்கர் விருது வென்றதும் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை வழங்கிய ராஜமௌலி மற்றும் கீரவாணி இருவருக்குமே நன்றி" எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர், "நாங்கள் ஆஸ்கரை வென்றுவிட்டோம்" எனக் குறிப்பிட்டு ராஜமௌலி மற்றும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.