rakul preet singh shared about her love and his lover Jackky Bhagnani

தமிழ் சினிமாவில் 'தீரன்', 'என்.ஜி.கே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இப்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'அயலான்' படத்திலும் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்கிறார். இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இதனிடையே பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக தனது சமூக வலைதளத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது காதல் குறித்து பேசியுள்ள ராகுல் ப்ரீத் சிங், "எனது வாழ்க்கையை இரட்டை வழியில் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள். அது ஒரு மனநிலை. ஆனால் நான் அப்படி இல்லை. காதலை வெளிப்படுத்தியுள்ளேன். கேமரா முன் நடிப்பது போல நிஜவாழ்க்கையிலும் நடிக்க தேவை இல்லை. நான் உண்மையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

Advertisment

எல்லாருடையவாழ்க்கையிலும் துணை என்பது முக்கியம். நானும், ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை பயத்தின் காரணமாகவே சிக்கலாக்குகிறோம். நான் அந்த பயத்துடன் செயல்பட விரும்பவில்லை" என கூறினார்.