
பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சைபெற்று வந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், இயக்குநர் ராஜூமுருகன் மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"சமூக ஆர்வலர் என்ற வார்த்தையையே நாறடித்துவிட்ட ஒரு சமூகத்தில், அதற்கான உண்மையான அர்த்தமாய் வாழ்ந்துவிட்டுச் சென்ற டிராஃபிக் ராமசாமி அய்யாவுக்கு நன்றிகளும் அஞ்சலிகளும்!" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)