rajinikanth vettaiyan movie trailer update

ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்திலும் மஞ்சு வாரியர் தாரா என்ற கதாபாத்திரத்திலும் ஃபகத் ஃபாசில் பேட்ரிக்(Patrick) என்ற கதாபாத்திரத்திலும் ரித்திகா சிங் ரூபா என்ற கதாபாத்திரத்திலும் அபிராமி ஸ்வேதா என்ற கதாபாத்திரத்திலும் கிஷோர் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Advertisment

அனிருத் இசையில் இப்படத்திலிருந்து முன்னதாக வெளியான டைட்டில் டீசர் மற்றும் முதல் பாடலான ‘மனசிலாயோ...’ பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் ‘ஹன்டர் வன்டார் சூடுடா...’ பாடல் வெளியாகியிருந்தது. இதனிடையே படத்தின் டீசரும் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. டீசரை பார்க்கையில் என்கவுண்டர் பற்றி விரிவாக பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், படத்தின் ட்ரைலர் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.