rajinikanth team up with bollywood producer Sajid Nadiadwala

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின்படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், ஒரு படத்திற்காக பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலாவுடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertisment