Skip to main content

பிரபல கன்னட படத்திற்கு ரஜினி பாராட்டு

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Rajini praises famous Kannada film

 

ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கிரண் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '777 சார்லி' படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கன்னடத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி. ஷெட்டி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உறவுகள் இல்லாத ஒரு இளைஞனுக்கும், ஒரு நாயிக்கும் இடையே இருக்கும் உறவைப் பறைசாற்றும் வகையில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை படத்தை பார்த்துவிட்டு கண் கலங்கி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறினார். 

 

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் '777 சார்லி' படத்தை பார்த்து படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை ரக்ஷித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என்ன ஒரு அற்புதமான ஆரம்பம் இன்றைய நாள். ரஜினிகாந்த் சாரிடம் அழைப்பு வந்தது. அவர் நேற்று இரவு '777 சார்லி' படத்தை பார்த்து ரசித்துள்ளார். அவர், படத்தின் மேக்கிங் பற்றியும், படத்தின் ஆழ்ந்த டிசைன்கள் பற்றியும் உயர்வாகப் பேசினார். குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் அது ஆன்மீகக் குறிப்பில் முடிவடைகிறதுதை பாராட்டினார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்பது அற்புதமாகவுள்ளது" என குறிப்பிட்டு ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரக்ஷித் ஷெட்டி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும்” - ரஜினிகாந்த் ஆவேசம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
rajinikanth latest speech

சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். 

அதன் ஒரு பகுதியாக, “25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க. 

என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல்,  மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.

Next Story

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வழக்கு - அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
prakash raj, bobby simha case update

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.