Skip to main content

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவிற்கு பாசிட்டிவ் வைப் கொடுத்த ரஜினி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

rajini meets jigarthanda 2 team

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷங்கர், அனிருத், நெல்சன் திலீப்குமார், அருண்ராஜா காமராஜ், அறிவழகன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், சிம்பு, புஷ்கர் காயத்ரி, பொன்ராம், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்” எனக் குறிப்பிட்டார். 

 

இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராடியுள்ளார் ரஜினி. இது தொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் பொழிந்ததற்கு மிக்க நன்றி தலைவா. எங்களுடனான உங்கள் ஒரு மணி நேர உரையாடல் எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் ஒரு பாசிடிவ்வான உணர்வைக் கொடுத்தது சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியன் 2 ; ரஜினி அளித்த பதில்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
rajini about kamal indian 2

ரஜினிகாந்த், தனது 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடித்துமுடித்துள்ளார். வேட்டையன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இதனிடையே கேரளாவிற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அங்கு சென்றார். பின்பு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், “கூலி படத்தின் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. வேட்டையன் பட பணிகளும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” என்றார். இதனிடையே இந்தியன் 2 படம் குறித்த கேள்விக்கு, நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார். 

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இந்தப் படத்துக்கும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க” - எஸ்.ஜே சூர்யா

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
sj surya request to watch his telugy movie

தமிழி சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் கைவசம் தனுஷின் ராயன், விக்ரமின் வீர தீர சூரன், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி., கார்த்தியின் சர்தார் 2, தெலுங்கில் நானியுடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இன்று எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அவர் நடித்து வரும் படக்குழுவினர் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தெலுங்கில் நானியுடன் அவர் நடித்து வரும் படத்தின் சார்பாக அவருக்கு பிறந்தநாள் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29இல் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கம் மூலமாக நன்றி கூறியுள்ளார். மேலும் ஒரு பதிவில், சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் டீசரை பகிர்ந்து, “என் அன்பும் ஆருயுருமான நண்பர்களே ராயன் படத்திற்கு பிறகு, தெலுங்கில் நானியுடன் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் வில்லனாக நடித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தையும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படத்தை  டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். கதாநாயகியாக ப்ரியங்கா மோகனா நடிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.