rajini jailer movie glimpse released

Advertisment

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5550d90c-e493-4cf8-9759-c213a23d2200" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_23.jpg" />

இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதாகச் சொல்லி நேற்று புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள். அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கையில், தனக்கே உரித்தான ஸ்டையிலில் கூலிங் க்ளாஸுடன் ரஜினி இருக்கிறார்.

Advertisment

இந்த கிளிம்ஸ், ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் இந்த கிளிம்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக கமெண்ட் செய்து அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.