Skip to main content

'வீர சிம்ஹா ரெட்டி' படத்துக்கு ரஜினி ரிவ்யூவ்? - இயக்குநர் பகிர்ந்த தகவல்    

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

rajini about balakrishna in veera simha reddy

 

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியான படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. இப்படத்திற்கு பாலகிருஷ்ணா ரசிகர்கள் வழக்கம்போல பட்டாசு, பேனர் எனக் கொண்டாடினர். அந்த கொண்டாட்டம் தொடர்பாக திரையரங்கில் தீ விபத்து, கிடா வெட்டு என பல சம்பவங்கள் இணையத்தில் வைரலானது. 

 

இப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இப்படத்தைப் பார்த்து படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் கோபிசந்த் மலினேனி ட்விட்டரில், "உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. படத்தை பார்த்து மிகவும் பிடித்ததாக கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து படத்தை பற்றி பாராட்டிய வார்த்தைகள், இதைவிட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. நன்றி ரஜினி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சமீபத்தில் நடந்த இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா, பழம் பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரை மரியாதை இல்லாமல் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அக்கினேனி குடும்பத்தைச் சார்ந்த  நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பின்பு அக்கினேனி நாகேஸ்வர ராவ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சொல்ல வந்தது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது" என ஒரு நிகழ்ச்சியில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஹனுமன்’ - புது அப்டேட் வெளியீடு 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
jai hanuman new update

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.  

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக வெளியானது. பின்பு டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகிவருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா, அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு படத்தை எடுக்கவுள்ளார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் முந்தைய காலகட்டத்தில் நடப்பதை பற்றி இருக்குமென ஹனுமான் படத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம். இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகவுள்ளது. படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது குறிப்பிடதக்கது. 

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.