Skip to main content

“நான் மனித கடவுள் அல்ல, கடவுளின் சேவகன்” - ராகவா லாரன்ஸ்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
raghava lawrence said I m not a human god

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பயணித்து வரும் ராகவா லாரன்ஸ்  விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்திலும் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து தனது ராகவேந்திரா புரொடைக்‌ஷன் சார்பில் உருவாகும் 2 படங்களை அறிவிக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் பின்பு தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாகும் என பகிர்ந்தார். 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலமாக நிறைய ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அந்த வகையில் சேவை என்ற அறக்கட்டளையின் மூலமாக ‘மாற்றம்’ என்ற பெயரில், கஷ்டப்படும் விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கவுள்ளதாக அறிவித்து, அதை செய்தும் முடித்துள்ளார். விழுப்புரம் தொடங்கி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கோயம்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தினருக்கு டிராக்டர்கள் வழங்கி, அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 

raghava lawrence said I m not a human god

இதனிடையே லாரன்ஸின் முயற்சிக்கு எஸ்.ஜே சூர்யா வாழ்த்து தெரிவித்ததோடு லாரன்ஸுடன் இணைந்து தானும் சேவை செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த், லாரன்ஸின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் ஓவியர் செல்வம் லாரன்ஸின் சேவையை பாராட்டி, ஆரத்தி தட்டில் சூடம் ஏற்றி, அதற்கடியில் ஸ்கெட்ச் பென்சிலை வைத்து சுவற்றில் லாரன்ஸின் முகத்தை வரைந்துள்ளார். மேலும் “மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ்” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ஓவியர் செல்வத்தின் திறமையை பாராட்டியுள்ளார். அந்த பதிவில், “வணக்கம் செல்வம் பிரதர், உங்கள் உழைப்பையும் திறமையையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோள், நீங்கள் சொன்னது போல், நான் மனித கடவுள் அல்ல. என் அன்பான மக்களுக்கு கடவுளின் சேவகன். உங்களது அற்புதமான திறமைகளுக்காகவும் எனக்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காகவும் விரைவில் உங்களை சந்திப்பேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் மீது மக்கள் ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளனர்” - ராகவா லாரன்ஸ்

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
raghava lawrence about vijay

நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி சேவை என்ற அறக்கட்டளையின் மூலமாக ‘மாற்றம்’ என்ற பெயரில், கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரது முயற்சிக்கு எஸ்.ஜே சூர்யா வாழ்த்து தெரிவித்ததோடு லாரன்ஸுடன் இணைந்து தானும் சேவை செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த், லாரன்ஸின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் மாற்றம் என்ற பெயரில் முதற்கட்டமாக கஷ்டப்படும் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தேடிச் சென்று 10 டிராக்டர்கள் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். 

அதன்படி முதல் ட்ராக்டரை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணன் என்பவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். பின்பு காஞ்சிபுரம் அக்கினம்பட்டு ஊரை சேர்ந்த பரமசிவம் குடும்பத்தினருக்கு ட்ராக்டர் வழங்கினார். பின்பு விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள விவசாயி ஒருவருக்கு வழங்கினார். இந்தனைத் தொடர்ந்து இன்று மயிலாடுதுறை தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு நான்காவது டிராக்டர் வழங்கினார். அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிய லாரன்ஸ், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், “டிராக்டர் வாங்கிவிட்டு சரியாக லோன் கட்ட முடியாமல் விவசாயிகள் இறந்துள்ளதாக செய்திகள் படித்திருக்கிறேன். அப்போதே ட்ராக்டர் கொடுக்க வேண்டும் என தோன்றியது. ஒரு குடும்பத்திற்கு கொடுப்பதை விட, அந்தப் பகுதியில் இருக்கிற நல்ல சமூக சேவகர் மூலம் கஷ்டப்படும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து, ஒருவர் மட்டும் பயன்படுத்துவதை தாண்டி, மீதமுள்ள நேரத்தில் மற்றவரக்ளும் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்” என்றார். 

அவரிடம் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “நண்பர் விஜய் அரசியலுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். மக்கள் அவர் மேல் ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் மக்கள் மீது ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளார். அவர் ஜெயிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.   

Next Story

“அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்” -  ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
raghava lawrence request to give  chance to handihapped childrens

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்தில் நடிக்கவுள்ளார். 

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே நிறைய மக்களுக்கு நிதி, கல்வி எனப் பல்வேறு உதவிகளை லாரன்ஸ் வழங்கி வருகிறார். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ராகவா லாரன்ஸின்  ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில்,  ‘மல்லர் கம்பம்’ சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், “என்னுடைய படங்களில் அதிகபட்சம் மாற்றுத் திறனாளி பசங்களை ஆடவைக்க முயற்சி செய்வேன். அவுங்களுக்கு நடனத்தை விட்டால் வேறு எதுவும் தெரியாது. வாழ்வாதாரமே நடனத்தில் தான் அடங்கியிருக்கு. ஆனால் கை கால்கள் இல்லை என்றாலும் கூட அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கே சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருக்கும் போது பசங்கள கூப்பிட்டு 5 நிமிஷம் ஆடசொல்லி பார்ப்பேன். இவுங்களே இவ்ளோ சாதிக்குறாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆனா எப்பிடி-னு ரீசார்ச் பண்ணிப்பேன்.

சமீப காலமாக பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்காம இருந்தாங்க. நான் நடிக்கிற எல்லா படத்திலும் மாற்றுத் திறனாளி பசங்களை பயன்படுத்தலாம் எனச் சொல்லி தயாரிப்பாளரிடம் கேட்பேன். எல்லா இடத்திலும் அவுங்களையே ஆட வைச்சா ரிப்பீட் ஆகிற மாதிரி இருக்கு மாஸ்டர்னு சொல்வாங்க. எத்தனையோ தடவை நயன்தாரா, த்ரிஷா ஆடியதையெல்லாம் பார்க்கிறோம்ல சார், இந்தப் பசங்களையும் பார்ப்போம் எனச் சொல்வேன். இதற்கு ஒரு சிலர் ஒத்துப்பாங்க, ஒரு சிலர் வேண்டாம்னு சொல்லிவிடுவாங்க. வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமல் எவ்ளோ விஷயங்கள் நடக்குது. அது தற்கொலை வரை போகிறது. ஆனால் இந்தப் பசங்களைப் பார்த்து தற்கொலை செய்யும் எண்ணம் வரவங்க கத்துக்க வேண்டும்” என்றார்.