
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ். கதிரேசன், தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். கே.பி. திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் துவங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்தப் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் 'ருத்ரன்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்...’ பாடலைரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குநராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)