Skip to main content

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகா சரத்குமாருக்கு விருது 

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

radhika sarathkumar get award uk parliament

 

80களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா.  தற்போதும் பல படங்களில்  கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். 

 

இந்நிலையில் திரைத்துறையில் திறன்பட செயல்பட்டதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகா சரத்குமாரும் ஒருவர். 

 

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, பேசிய ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வு குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Next Story

நடிகை ராதிகாவை பராசக்தி மாரியம்மனோடு ஒப்பிடுவதா? - பா.ஜ.க. நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition to BJP executive who compared actress Radhika with Parasakthi Mariamman

பா.ஜ.க. சார்பில் விருதுநகரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர் ராதிகா, அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன், “ராதிகா சரத்குமார் நல்லவர். மங்கலகரமானவர். விருதுநகர் பராசக்தி மாரியம்மனே வேட்பாளராக நமக்குக் கிடைத்திருக்கிறார்.” என்று உணர்ச்சிவசப்பட, பாஜக தொண்டர்கள் மெய்சிலிர்த்தனர். விருதுநகரில் தற்போது  பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா  துவங்கியிருக்கிறது.

ஏராளமான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். ஆன்மீகப் பரவசம் பெருக்கெடுத்து ஓடும் இத்தருணத்தில் நடிகை ராதிகாவை, விருதுநகர் பராசக்தி மாரியம்மனுடன் ஒப்பிட்டுப் பேசியதை விருதுநகர் மக்கள் ரசிக்கவில்லை. ‘பக்தியைப் பரப்புவது போல் கோஷமிடுகிறார்கள். ஆனால், நடிகை ராதிகாவை பராசக்தி மாரியம்மனாகப் பார்க்கிறார்கள். இது முரண்பாடு அல்லவா?’ என நம்மிடம் கேள்வி எழுப்பினார் உள்ளூர் அம்மன் பக்தரான ஆறுமுகசாமி.