Skip to main content

"இந்தப் படத்தில் நடிச்சா தலையை வெட்டிருவாங்களா?" ருத்ரதாண்டவம் பட மேடையில் ராதாரவி பேச்சு!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Radha Ravi

 

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசையமைத்துள்ளார். யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ராதா ரவி, "இந்தப் பட ட்ரைலரை பார்த்துவிட்டு அவரை அட்டாக் செய்வதுபோல இருக்கிறது... இவரை அட்டாக் செய்வதுபோல இருக்கிறது என்கிறார்கள். யாரையும் அட்டாக் செய்யவில்லை. ஒரு நியாயமான கோரிக்கையை அருமையாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை பார்த்துவிட்டு மற்றவர்கள் திருந்தவேண்டும். இந்தப் படம் அனைவருக்குமான பொதுவான படம். அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியான பிறகு படம் பேசுபொருளாகும். கர்ணன் படம் பெற்ற புகழைவிட இரு மடங்கு புகழை இந்தப் படம் பெறும். நான் வணங்கும் ஒரு சில தலைவர்களில் ஐயா அம்பேத்கரும் ஒருவர். இந்தியாவிற்காக அரசியல் சாசன சட்டத்தை எழுதிக்கொடுத்தவர். குறிப்பிட்ட ஒரு சாதிக்காக அவர் அரசியல் சாசன சட்டம் எழுதவில்லை. இதைப் பேசுவதுதான் இந்தப் படம். இந்தப் படத்தில் ராதா ரவி நடித்துவிட்டார் என்கிறார்கள். நான் என்ன பூச்சாண்டியா... ஏன் நான் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதா? நடித்தால் தலையை வெட்டிருவாங்களா? படத்தை பார்த்தோமா ரசித்தோமா என்று இருங்கள்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்