Skip to main content

”கமல்தான் என்னை மன்மதலீலையில் சிக்க வைத்தார்” - ராதா ரவி கலகல பேச்சு

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Radha Ravi Speech Kanal Audio Launch

 

சமயமுரளி இயக்கத்தில் காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கனல். தி நைட்டிங்கல் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில்  ஜெய்பாலா தயாரிக்க, தென்மா மற்றும் சதிஷ் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசுகையில், “இந்தக் கனல் படத்தின் நாயகி காவ்யா சகோதரி நல்லா தமிழ் பேசுனாங்க. என் சினிமா கேரியரில் முதலில் கன்னடத்தில்தான் நடித்தேன். கமல்தான் இங்கு மன்மதலீலையில் சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்க ஆள்போல. நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடியிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை  மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு வாழ்த்துகள். 

 

இசையமைப்பாளர் தென்மா சிறப்பாக இசையமைத்துள்ளார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார். இந்த ஹீரோயின் புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம். சமயமுரளி இந்தப்படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததற்கு வாழ்த்துகள். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி மேலே இருந்து வந்தவர். இப்ப யார் யாரோ நடிக்க வந்துட்டாங்க. நானூறு படம் நடித்துவிட்ட பிறகும் நானே சிலரிடம், நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியுள்ளது.

 

இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேசமுடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன என்று கேட்டேன். நடிகை தமன்னாவை பார்த்து நான் வியந்தேன். அவ்வளவு கலராக இருப்பார். இந்தப்பொண்ணு காவ்யாவும் தமன்னா போல அவ்ளோ கலரு. படத்தில் சிறப்பாகவும் நடித்துள்ளார். கீழ இருப்பவர்களைப் பற்றி படம் எடுக்கும் சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டப்பிங் யூனியன் தேர்தல்; மீண்டும் தலைவரான சீனியர் நடிகர் !

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Dubbing Union Election - Senior Actor radharavi as President again

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 23 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

ராதாரவி காலில் அடிப்பட்டுள்ளதால், தனது கைத்தடியுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவியாக வந்திருந்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.  

 

Dubbing Union Election - Senior Actor radharavi as President again

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.  மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ராதாரவி 662 வாக்குகள் பெற்று தனது எதிராக போட்டியிட்ட ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரை விட 313 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

இதனிடையே 2024-2026-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16ஆம் தேதி நடந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பேரரசு, பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவராக அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச் செயலாளராக சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட பழனியில் உள்ள சங்கத்தில் நேற்று பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

cinema dubbing union office issue

 

சென்னை சாலி கிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக சினிமா டப்பிங் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடடத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ராதாரவி 45 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த கட்டிடத்தை விதிகளை மீறி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை ராதாரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதிலளிக்காமல் ராதாரவி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 


 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.