Skip to main content

ஓடிடியில் கால்பதிக்கும் இயக்குனர் ராதாமோகன்!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

ggesgdg

 

பிரபல ஓடிடி தளமான 'ஜீ5'-ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு வைபவ் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ஜீ5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் வரும் மே 28 அன்று ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

 

முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தைப் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசை சுனாமி பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதார்த்த நடிப்பை வாங்கினார்” - இயக்குநரைப் புகழ்ந்த சாந்தினி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

Chandini - Bommai Press meet

 

பொம்மை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ராதாமோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகைகள் சாந்தினி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்வில் கலந்துகொண்ட சாந்தினி பேசியதாவது, “இந்தப் படத்தில் பணியாற்றியது பெருமையான விஷயம். ராதாமோகன் சாருடைய அலுவலகத்திலிருந்து கால் வந்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. என்னிடமிருந்து எதார்த்தமான ஒரு நடிப்பை ராதாமோகன் சார் வாங்கியுள்ளார். 

 

எஸ்.ஜே. சூர்யா சாரின் பெரிய ரசிகை நான். அனைவரையும் மதிக்கக்கூடிய மனிதர் அவர். இளம் நடிகர்களை அவர் எப்போதும் ஊக்குவிப்பார். நடிப்புதான் அவருக்கு எல்லாமே. எண்ணம் போல் வாழ்க்கை என்று அவர் சொல்வார். அவருடைய எண்ணம் போல் அவருடைய வாழ்க்கை இருக்க வேண்டும். யுவன் சாருடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியான அனுபவம்” என்றார். 

 


 

Next Story

"அவர் மேல் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது" - எம்.எஸ். பாஸ்கர் 

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

bfdh

 

பிரபல ஓடிடி தளமான ஜீ ஃபையில் ‘லாக்கப்', ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த 2021ம் வருடத்தில் ஜீ ஃபை தளத்தில் மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகள் தொடர்ந்து வரவிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் அடுத்தப் படைப்பாக, வைபவ் - வாணி போஜன் நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை 'ஜீ ஃபை' தளம் வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 

bsbsd

 

மேலும் இப்படம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், ‘'இயக்குநர் ராதாமோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு 'அழகிய தீயே' படத்தில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து 'மொழி', 'பிருந்தாவனம்', 'காற்றின் மொழி' இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்தப் படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார். மற்ற படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

 

bcxbxz

 

நடிகர் கருணாகரன் கூறுகையில், ''நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. 'உப்பு கருவாடு' படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி. அதே சமயம் வைபவ், எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்'' என்றார்.