Skip to main content

பிரபல தயாரிப்பாளர் காலமானார்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

பிரபல தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி தன்னுடைய 75வயதில் காலமானார்.
 

venkatrama reddy

 

 

தமிழ் திரையுலகில் மிகவும் பழமைவாய்ந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று விஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ். கடந்த 1948 ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் தொடங்கப்பட்ட இவ்நிறுவனம் இப்போதுவரை பல படங்களைத் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது. எங்க வீட்டுப் பிள்ளை, உழைப்பாளி, வீரம், பைரவா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளனர்.
 

இந்த நிறுவனத்தை பி.நாகிரெட்டி மறைவுக்குப் பின்னர் அவரது இளைய மகன் பி.வெங்கட்ராம ரெட்டி நிர்வகித்து வந்தார். இவரது மேற்பார்வையில் தான் ‘தாமிரபரணி’ முதல் ‘பைரவா’படங்கள் வரை தயாரிக்கப்பட்டது. இவரின் மேற்பார்வையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து சங்கத்தமிழன் தயாராகி வருகிறது. இது வெங்கட்ராம ரெட்டியின் கீழ் உருவாகும் ஆறாவது படம் ஆகும்.
 

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த வெங்கட்ராம ரெட்டி நேற்று மதியம் 1 மணியளவில் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை நெசப்பாக்கத்தில் நடைபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மகாராஜா படக்குழு(படங்கள்)

Published on 20/06/2024 | Edited on 20/06/2024

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' இணைந்து தயாரித்த திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதால், இதனைக் கொண்டாடும் வகையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

Next Story

“இதுதான் எனது சிறந்த தந்தையர் தினம்” - மகனின் திரைப்பட விழாவில் விஜய்சேதிபதி நெகிழ்ச்சி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Vijay Sethupathi speech about his son film

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ‘ஃபீனிக்ஸ் வீழான்’என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத் உள்ளிட்ட பலரும் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குத்துசண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகியது. சென்னையில் நடந்த டீசர் வெளியிட்டு விழாவில் படக்குழு மற்றும் விஜய்சேதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி, “என் மகன் சினிமாவுக்கு வருவதை பற்றி எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்தபிறகு அனல் அரசு மாஸ்டர் என் மகனை சந்தித்து கதை சொன்னார். இதை நான் துளியும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் என் மகனுக்கு சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் தாக்குப்பிடிப்பது மிக மிக கஷ்டம். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. அனல் அரசு என்ற அற்புதமான மனிதர்  மூலமாக அவன் அறிமுகம் ஆகிறான். அவன் பிறந்து இதுவரைக்கும் 19 தந்தையர் தினம் கொண்டாடி இருக்கிறேன். ஆனால் இதுதான் எனது சிறந்த தந்தையர் தினமாக இருந்துள்ளது. ”என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதிபதியின் நானும் ரௌடிதான், சிந்துபாத் உள்ளிட்ட சில படங்களில் சூர்யா தந்தையுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.