Skip to main content

"பொதுமக்களின் மனதை கவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி" - தயாரிப்பாளர் ராகுல்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

producer ragul thanks udhayanidhi stalin

 

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படம் குறித்து Romeo Pictures தயாரிப்பாளர் ராகுல் கூறுகையில், "நெஞ்சுக்கு நீதி நேர்மறையான விமர்சனங்களுடன் பார்வையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் நல்ல ஓப்பனிங் கொண்ட திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெறாமல் போகலாம் என்ற அனுமானம் எப்போதும் உண்டு, ஆனால் இந்த திரைப்படம் அவற்றை தவறென  நிரூபித்துள்ளது. இந்த திரைப்படத்தில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக போனி கபூர் சார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் அவர்களுக்கு நன்றி.

தனது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பால் பொதுமக்களின் மனதை கவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றிகள். அநீதியை சகிக்காத மனிதனாக சமுதாயத்தில் வளர்ந்து வரும் அவருக்கு இத்திரைப்படம் ஒரு சான்றாக நிற்கிறது. ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திரக் குழுவின் தீவிர முயற்சிகளை பார்வையாளர்கள் கவனித்து அவர்களைப் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தத் திரைப்படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர்,

மேலும் திரைப்படத்தின் தரத்தை அதிகரிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு சிறந்த பலனைத் தந்துள்ளது. தமிழரசன் பச்சமுத்துவின் வலிமையான வசனங்கள் திரையரங்குகளில் பெருத்த கைதட்டலை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்காக இவ்வளவு அற்புதமான அர்ப்பணிப்புக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மொத்தக்குழுவின் கேப்டன் அருண்ராஜா காமராஜின் அற்புதமான படைப்பு. அவர் தனது தனித்த திறமையால் அற்புதமான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் வளர்த்த விதம் அற்புதமானது. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

தென்சென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) தென் சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்