K Rajan

எஸ்.எஸ்.ஷிஜின்லால் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கிராண்மா'. ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எம்.ஏ ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="db83a75b-1f85-4d46-b905-17285adf9064" height="286" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad_4.jpg" width="477" />

Advertisment

இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த நடிகைகள் சோனியா அகர்வால், விமலா ராமன் மற்றும் ஷர்மிளாவிற்கு பாராட்டுகள் தெரிவித்தார். மேலும், பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்கும் நடிகை நயன்தாராவை மறைமுகமாக விமர்சிக்கவும் செய்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "தமிழ் படங்களின் ஆடியோ விழாக்களுக்கு படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் வருவதேயில்லை. இன்றைக்கு நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஒரு ஹீரோயினிடம் ஏன் நீங்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை எனக் கேட்டதற்கு, நான் இந்தப் படம் நல்லா இருக்குதுனு சொல்லிட்டு ரிலீஸ் ஆகும்போது ஃபெயிலியர் ஆகிட்டா அது எனக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் என்கிறார். நீங்கள் நடித்து படம் ஃபெயிலியர் ஆவதற்காகவா 5 கோடி சம்பளம் வாங்குனீங்க. ஆனால், அவருடைய சொந்த தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்" எனக் கூறினார்.