Skip to main content

விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல நடிகை ஆதரவு!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

Priyanka Chopra

 

 

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 12 நாட்களாக நீடித்து வரும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிவருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நமது விவசாயிகள் நம் நாட்டின் உணவை உற்பத்தி செய்யும் வீரர்கள். அவர்களது பயம் தீர்க்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கை பூர்த்தி செய்யப்படவேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடாக, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுப்பதை உறுதி செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

"ஆடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தினார்" - பிரியங்கா சோப்ரா பகீர் குற்றச்சாட்டு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

priyanka chopra accusses bollywood film director

 

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 

 

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் நடக்கும் அனுபவங்கள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பேசி வருகிறார். அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்களையும் பகிர்ந்திருந்தார். அண்மையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக பாலிவுட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 

 

இதனை ஒரு ஆங்கில ஊடகத்தில் சொன்ன அவர், இது பற்றி விரிவாகக் கூறுகையில், "2002-2003 ஆம் ஆண்டுகளில் ரகசிய ஏஜெண்ட்டாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஒரு ஆணை வசியம் செய்ய வேண்டும். அதில் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளுடன் அந்த நபரை மயக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். அதனால் ஸ்கின் ட்ரெஸ் (Skin dress) அணிந்து கொண்டு நடிப்பதாகச் சொன்னேன். ஆனால், அந்த இயக்குநர் ஸ்கின் ட்ரெஸ் இல்லாமல் உள்ளாடைகளுடன் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் இதைப் பார்க்கத் தான் ரசிகர்கள் வருவார்கள் என ஆபாசமாகப் பேசினார்" என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விஷயத்தை அந்த இயக்குநர் என்னிடம் சொல்லவில்லை. என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் சொன்னார். அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம்" என்றார். பின்பு தனது அப்பாவின் அறிவுறுத்தலின் படி அப்படத்திலிருந்து விலகிவிட்டேன். மொத்தம் 2 நாட்கள் நடித்திருந்த நிலையில் அதற்கான செலவுகளை படக்குழுவிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த இயக்குநர் பெயரை பிரியங்கா சோப்ரா சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.