Skip to main content

"இதை சொன்னால் நாளைக்கு தலைப்பு செய்தியாக மாறிவிடும்" - பிரித்விராஜ் பேச்சு

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

prithviraj sukumaran talk about mullai periyar

 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன்  கதாநாயகியாக நடிக்க, விவேக் ஓபராய், அர்ஜுன் அஷோகன், சித்திக் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 

 

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள கடுவா படக்குழு சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதில். இதில் பிரித்விராஜ் கலந்து கொண்டு பல கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், "சமீபத்தில் முல்லைப் பெரியாறு குறித்து நீங்கள் செய்த ட்வீட்க்கு தமிழ் ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருக்கையில் கடுவா படத்திற்கு எப்படி தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடிகர் பிரித்விராஜ், "ரொம்ப நல்ல கேள்வி, ஆனால் நான் இந்த கேள்விக்கு பதில் சொன்னால், இது மட்டுமே நாளைக்குத் தலைப்பு செய்தியாக மாறிவிடும். நான் இங்க கடுவா படம் குறித்து பேசத்தான் வந்தேன்" என்று  கூறி கேள்வியைத் தவிர்த்து விட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.