Pregnant Malayalam tv actress Dr Priya passed away

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியா (34). திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இப்போது 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் வழக்கம் போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பெற்ற அவர் பலனின்றி இறந்துள்ளதாக நடிகர் கிஷோர், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் பிரியாவின் குழந்தை தற்போது ஐசியு-வில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நடிப்பை தாண்டி பிரியா ஒரு மருத்துவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு கேரளா சின்னத்திரை உலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மற்றொரு பிரபல மலையாள நடிகையான ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35. அவர் இறந்த சில நாட்களிலே மற்றொரு சின்னத்திரை பிரபலம் மறைந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.