pradeep ranganathan next with ashwanth marimuthu

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தை 'ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரங்களில்நடித்திருந்தனர். 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவகியது. அந்த சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லலித் தயாரிக்க கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

pradeep ranganathan next with ashwanth marimuthu

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஓ மை கடவுளே பட இயக்குநர் அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மே முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். மேலும் 10 வருடத்திற்கு முன்னால்எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.