Skip to main content

“என் நீண்ட நாள் கனவு...” -பிரபாஸ்!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020
prabhas

 

 

பாகுபலி பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் வேறு ஒரு தளத்திற்கு சென்றது. அதை பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாஹோ படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்த படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை. 

 

இதனை தொடர்ந்து பிரபாஸின் 20வது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. “பிரபாஸ் 20 என்று அழைக்கப்படும் இந்த படத்தை கே கே ராதா கிருஷ்ணா இயக்குகிறார். 

 

இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தெலுங்கு சினிமா துறையில் மிக பிரபலமான மற்றும் பழமையானதுமான வைஜெயந்தி மூவிஸ், தெலுங்கு சினிமா துறையில் தனது 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஷ்வின். அவரது மனைவியும், வவைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகளுமான ப்ரியங்கா தத் தான்  'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தனர்.

 

லாக்டவுன் சமயத்தில், இந்த படத்தில் பிரபாஸுடன் நாயகியாக நடிக்க போகிறவர் தீபிகா படுகோன் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த அறிவிப்பு ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, ‘‘என் நீண்ட நாள் கனவு, இத்திரைப்படம் மூலம் விரைவில் நிறைவேற உள்ளது. இதில் நடிக்க ஒப்புக்கொண்ட அமிதாப் பச்சனுக்கு நன்றி’’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர்கள்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Back to Back blockbusters from Prabhas

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. பிரம்மாண்ட படங்களின் நாயகன் பிரபாஸ் நடித்திருந்ததாலேயே அவரது ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளதால் ‘கல்கி 2898 ஏடி’ திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங்க் படமாக மாறியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

பிரம்மாண்ட படம் - புதிய முயற்சி எடுத்த கீர்த்தி சுரேஷ்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
keerthy suresh dubbed bujji in kalki ad 2898 movie

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கெனவே பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

keerthy suresh dubbed bujji in kalki ad 2898 movie

இந்த நிலையில் இப்படத்தின் புஜ்ஜி என்ற பெயரில் பிரபாஸின் நண்பனாக அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. அதோடு புஜ்ஜியின் மூளை அதன் உடல் வடிவத்துடன் கூடவே இணைந்த வித்தியாசமான உருவத்தில் உள்ளது, அதன் அறிமுக வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரபாஸின் நண்பராக வரும் புஜ்ஜி, அவருக்கு நிறைய அறிவுரைகளை வழங்குகிறது. இருவருக்கும் இடையிலான நட்பை விவரிக்கும் விதமாக இந்த அறிமுக வீடியோ உருவாகியுள்ளது. இதில் சிறப்பம்சமாக புஜ்ஜி ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதன் அறிமுக விழா ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் முன்பு நடந்தது. 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா, கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் ’புது மெட்ரோ ரயில்...’ பாடல் மூலமாக பாடகராக உருவெடுத்தார். இப்போது முதல் முறையக மற்றொரு கதாபாத்திரத்திற்கு அதுவும் ரோபோவுக்கு குரல் கொடுத்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் கீர்த்தி சுரேஷை வைத்து மகாநதி படத்தை இயக்கியவர். இந்தப் படம் கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

The website encountered an unexpected error. Please try again later.