Skip to main content

சோகத்தோடு 'பீஸ்ட்' பட அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

pooja hegde released beast movie new update

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

 

முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நிறைவுசெய்த படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றது. அங்கு ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில்  படப்பிடிப்பை நடத்திவரும் படக்குழு, சமீபத்தில் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பை நிறைவுசெய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

ad

 

இந்நிலையில்  பீஸ்ட் படம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே பேசும் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், " 'பீஸ்ட்' படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் சிரித்துக் கொண்டுதான் இருந்தோம், நீங்களும் படத்தை பார்த்து சிரித்து மகிழ்வீர்கள். நெல்சன் மற்றும் விஜய் இவர்களின் ஸ்டைல்களில் பக்கா என்டர்டைமென்ட் படமாக 'பீஸ்ட்' உருவாகி வருகிறது.  இதில் சோகம் என்னவென்றால் இன்றுதான் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு கடைசி நாள். நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் " எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே நேற்று (9.12.2021) 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மற்றுமொரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்