Skip to main content

கோலிவுட்டில் மூன்றாவது படம் - சூர்யாவிற்கு ஜோடியான பூஜா ஹெக்டே

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
pooja hegde to pair with suriya in karthik subbaraj new movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்களும் கமிட்டாகினர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் திடிரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சூர்யாவின் 44ஆவது படமாக இப்படம் உருவாகும் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் ஜூன் இடையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவித்தது. பின்பு முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானி தொடங்குவதாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தது. அங்குப் பிரம்மாண்ட செட் போடப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் ஹூரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை முகமூடி, பீஸ்ட் என இரண்டு தமிழ்ப் படங்களிலே நடித்துள்ள இவர், தற்போது சூர்யா படத்தின் மூலம் மூன்றாவது தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். இதனிடையே இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஃபயர்’ - சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா அப்டேட்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
kanguva first single updat

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 23ஆம் தேதி ‘ஃபயர்’ (FIRE SONG) என்ற பாடல் வெளியாகவுள்ளது. அன்றைய தினம் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

விலகும் சூர்யா - கமிட்டாகும் சிவகார்த்திகேயன்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
sivakarthikeyan to play lead in sudha kongara instead suriya

சூரரைப் போற்று வெற்றிக்குப் பிறகு சூர்யாவும் சுதா கொங்கராவும் மீண்டும் ஒரு படத்திற்கு கைகோர்த்தனர். இப்படம் சூர்யாவின் 43வது படமாக உருவாகும் எனத் தெரிவித்த படக்குழு, கடந்த ஆண்டு அக்டோபரில் படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டது. அதில் படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றது. மேலும் ஒரு போராட்டக் களத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடப்பதாகவும் அங்கு அடிதடி, பாட்டில் உள்ளிட்டவை வீசப்பட்டு அந்த இடமே ஒரு போர்க்களமாக காட்சியளிப்பது போல் அந்த வீடியோ அமைந்ததிருந்தது. 

2டி நிறுவனம் தயாரிக்கவிருந்த இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க கமிட்டாகியிருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்தது. இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளதாக அப்டேட் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தில் சூர்யா தற்போது விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 2டி நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை தற்போது ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.