Skip to main content

"உலகின் பிற பகுதிகளுக்கு..." - சோழர்கள் குறித்து ஆனந்த் மகிந்திரா ட்வீட்

 

ponniyin selvan anand mahindra tweet about cholas empire

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். சோழர்களின் வாழ்க்கையை குறித்து கற்பனையாக எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை தழுவி இப்படம் உருவாகிவுள்ளதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் நாளை (30.09.2022) பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

இந்நிலையில் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் சோழர்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "சோழப் பேரரசின் சாதனை, பலம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை நாம் சரியாக உள்வாங்கவில்லை என நினைக்கிறேன். அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உலகின் பிற பகுதிகளுக்கு நாம் போதுமான அளவு கொண்டு சேர்க்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார். அதோடு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மகிந்திரா. 
 

 

 

சார்ந்த செய்திகள்