தமிழில் வசந்தகால பறவை, சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா, திருமூர்த்தி, கல்லூரி வாசல் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் பவித்ரன்.
இவர் தற்பொழுது கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் படத்தின் கதையை கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்திருக்கின்றார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்திருக்கின்றார். அர்ஜுன் ஜென்யா இசையமைத்துள்ள இப்படத்தை பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்தப்படம் பெற்று வருகிறது.